ஓட்டலில் க்ளீனர்…இரவுகளில் பானி பூரி விற்பனை.. கிரிக்கெட்டில் புது சாதனைப் படைத்த சிறுவன்!

 

ஓட்டலில் க்ளீனர்…இரவுகளில் பானி பூரி விற்பனை.. கிரிக்கெட்டில் புது சாதனைப் படைத்த சிறுவன்!

இந்தியாவின் தேசிய விளையாட்டு வேண்டுமானால் ஹாக்கி விளையாட்டாக இருக்கலாம். ஆனால், கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற தினத்தில் இருந்து இந்திய இளைஞர்களின் பொழுதுபோக்கு விளையாட்டாக கிரிக்கெட் உருவானது. சச்சினை கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகனா பார்த்து வந்த ரசிகர்கள், தோனியைத் தங்களது தலைவனாகவே எண்ண துவங்கினார்கள்.

இந்தியாவின் தேசிய விளையாட்டு வேண்டுமானால் ஹாக்கி விளையாட்டாக இருக்கலாம். ஆனால், கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற தினத்தில் இருந்து இந்திய இளைஞர்களின் பொழுதுபோக்கு விளையாட்டாக கிரிக்கெட் உருவானது. சச்சினை கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகனா பார்த்து வந்த ரசிகர்கள், தோனியைத் தங்களது தலைவனாகவே எண்ண துவங்கினார்கள். இந்நிலையில், உத்தரபிரதேசல் கூலி வேலை செய்யும் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் யாஷவி, வறுமையில் சுழற்றிப் போட்டதில் பள்ளிப்படிப்பை எல்லாம் பாதியிலேயே தூக்கியெறிந்து விட்டு, மும்பையில் ஹோட்டல் ஒன்றில் க்ளீனராகவும், எடுபிடி வேலைகளையும் செய்து வந்தான். இரவு நேரங்களில் பானி பூரிகளை விற்று வந்த சிறுவனுக்கு படுக்க இடம் கிடைக்கவில்லை. அதன் பிறகு உறவினரின் உதவியால் அங்குள்ள முஸ்லீம் யுனைட்டட் கிளப் மைதான கட்டிடத்தில் தங்க அனுமதி கிடைத்தது. இரவு நேரங்களில் அந்த மைதானத்தில் பயிற்சிக்காக சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது யாஷவியும் பந்தைப் பொறுக்கிப் போடுவது, அவ்வப்போது அவர்களுடன் விளையாடுவது என்று நாட்கள் நகர்ந்தது.

yashavi

ஒரு நாள் யாஷவி, இடது கையில்  பேட் பிடித்து பந்தை அசால்டாக விளாசுவதைப் பார்த்த பயிற்சியாளர் ஜ்வாலா சிங், யாஷவிக்கு தங்குவதற்கு இடம் கொடுத்து, பயிற்சியும் கொடுத்திருக்கிறார். இப்போது ஏ-டிவிஷன் போட்டிகளில் சீனியர் வீரர்களின் பந்துகளை அசாத்தியமாக விளாசுகிறான் 17 வயதான யாஷவி.
வாழ்க்கை யாஷவிக்கு வேறு ஒரு கணக்கு எழுதியிருக்கிது. விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 பந்துகளில் 203 ரன்களை விளாசி, மிகக் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பிரம்மிக்கத்தக்க சாதனையை படைத்துள்ளார் யாஷவி. விரைவில் இந்திய சீனியர் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.