ஓடு வேய்ந்த மாட்டுக் கொட்டகையில் வசிக்கும் மிஸ்ட்டர் யுனிவர்ஸ்..!?

ஓடு வேய்ந்த மாட்டுக் கொட்டகையில் வசிக்கும் மிஸ்ட்டர் யுனிவர்ஸ்..!?

அந்த இளஞரின் பெயர் சித்தரேஷ் நடேசன்,கேரள மாநிலம் எர்ணாகுளதில் வசிக்கிறார்.ஓடு வேய்ந்த ஒரு மாட்டுக்கொட்டகைதான் வீடு.அப்பா நடேசன் கே.கே ஒரு தனியார் நிறுவணத்தில் கடைநிலை ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர்.அம்மா நிர்மலா,ஒரு மாமா இரண்டு அத்தைகள் கொண்டது சித்தரேஷின் குடும்பம்.எல்லோரும் வசிப்பது ஒரு பழைய மாட்டுக் கொட்டகையில். கூடவே ஆறு மாடுகளும் இருக்கின்றன. அதுதான் அவர்களின் வாழ்வாதாரம்.

natesan

எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் படிக்கும்போது சித்தரேஷ் ஒரு ஹாக்கி சாம்பியன்.முதலில் கல்லூரிக்காகவும்,பிறகு கேரள மாநில அணியிலும் விளையாடி இருக்கிறார்.அதற்குப் பிறகு திருவனந்தபுரத்தில் இருக்கும் லட்சுமிபாய் உடற்கல்வி கல்லூரியில் சேர்ந்தபோதுதான் பாடி பில்டிங்க்கில் ஆர்வம் ஏற்பட்டு முழு மூச்சாக இறங்கி தென்கொரியாவில் நடந்த மிஸ்ட்டர் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு 90 கிலோ எடைப் பிரிவில் பட்டம் வென்றிருக்கிறார். 

natesan

இந்த போட்டியி வென்றதில் சித்தரேஷுக்கு கிடைத்த பெரிய பாராட்டுகளில் முக்கியமானது ‘ இந்திய இளைஞர்கள் இப்படி புதுப்புது துறைகளில் வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்கிற சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்!.
முப்பத்தி மூன்று வயதாகும் சித்தரேஷ் நடேசன் தற்போது டெல்லியில் பயிற்சியில் இருக்கிறார்.அவரது ஒரு நாள் உணவு,40 முட்டைகள்,மற்றும் ஒரு கிலோ சிக்கன்.கூடவே காய்கறிகளும் மீனும் உண்டு. ட்ரைனர் சாகர்,மருத்துவர் ஃபிஸியோ தெரப்பிஸ்ட்,மசாஜ் ஸ்பெஷலிஸ்ட் என்று பெரிய டீமே இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கிறது. 

dad

இந்த பயிற்சிகளுக்கும் உணவிற்கும் மாதம் ஒரு லட்ச ரூபாய் செலவிடுகிறார். சித்தரேஷ் நசீபா நுர்தேவா என்கிற உஸ்பெக்கிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்து இருக்கிறார்.இடைவிடாத பயிற்சி,நல்ல உணவு,மகிழ்வான மனநிலை இந்த மூன்றும் பாடி பில்டிங்கிற்கு முக்கியம் என்று சொல்லும் சித்தரேஷ் தன் மனநிலையை மகிழ்வாக வைத்திருப்பது மனைவி நசீமாதான் என்கிறார்.

natesan

சித்தரேஷுக்கு பெரிய ஆசைகள் எல்லாம் ஒன்றுமில்லை,ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும் என்கிறார். உலகமே இண்டியன் மோன்ஸ்ட்டர் என்று அழைக்கும் இந்த உள்நாட்டு அர்நால்ட்,விரைவில் விஜயோடோ அஜித்தோடோ மோதுவதை நாம் பார்க்கலாம்.