ஓடும் ரயிலில் நூதன திருட்டு; இளைஞர் கைது!

 

ஓடும் ரயிலில் நூதன திருட்டு; இளைஞர் கைது!

மும்பையின் கல்யான் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் பிரகாஷ் ராஜேஷ் சிங். இவர் நாக்பூரில் இருந்து மும்பை வரும் நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்

மும்பை: ஓடும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் செல்போன் திருடிய இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையின் கல்யான் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் பிரகாஷ் ராஜேஷ் சிங். இவர் நாக்பூரில் இருந்து மும்பை வரும் நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். ரயில், தாதர் ரயில்நிலையத்தை கடந்ததும் ரயில்வே போலீசார் அதில் ஏறியுள்ளனர்.

பயணிகளின் ஸ்லீப்பர் கம்பார்ட்மென்ட்டில் தொடர்ந்து சுற்றித் திரிந்த பிரகாஷ் ராஜேஷ் சிங் மீது ரயில்வே போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால், அவரை பிடித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், முன்னுக்கு பின் முரணான பதிலளித்த அவரிடம், சரியான பயணச்சீட்டும் இல்லை.

arrest

இதையடுத்து, அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சுமார் 11 செல்போன்களை அவரிடமிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். அனைத்து செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருக்கவே, அதில் ஒரு போனை அவர்கள் ஆன் செய்துள்ளனர். அப்போது, அந்த செல்போனின் உரிமையாளரிடம் இருந்து அதற்கு அழைப்பு வந்துள்ளது.

rpf

அதனைத் தொடர்ந்து, அவை அனைத்தும் திருடப்பட்ட செல்போன்கள் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட 11 செல்போன்களில் இரண்டு செல்போன்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞரினுடையது. மீதமுள்ள 9 செல்போன்களில் இரண்டு செல்போன்களை அதன் உரிமையாளர்கள் புகார் ஏதும் கொடுக்காமல் வாங்கிச் சென்றுள்ளனர். எஞ்சிய 7 செல்போன்களின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க

மனைவியை நாய் உடன் உறவுகொள்ளச் சொன்ன செக்ஸ் கொடூரனுக்கு 10 ஆண்டுகள் சிறை