ஓடும் பேருந்தில்  பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; அதிர்ச்சியில் உறைந்த பிற பயணிகள்  

ஓடும் பேருந்தில்  பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; அதிர்ச்சியில் உறைந்த பிற பயணிகள்  

ஓடும் பேருந்தில்,பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற கல்லடா டிராவல்ஸுக்கு சொந்தமான பேருந்தில், தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூரில் நடைபெறும் மீட்டிங்கில் கலந்துக் கொள்வதற்காக பயணம் மேற்கொண்டார். படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்தில் இரவு பயணம் மேற்கொண்ட அவர், அசதியில் இரவு நேர பயணம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்தார். 

kalada travels

தொலை தூர பேருந்து பயணங்களில் இரு டிரைவர்கள் இருப்பார்கள். நேற்று இரவு பேருந்து திருவனந்தபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பேருந்தில் ஆக்டிங் டிரைவராக இருந்த ஜான்சன் ஜோசப் என்பவர், தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் சில்சிஷம் செய்துள்ளார். யாரோ தம் மீது கைகளை வைத்து தடவுவதை உணர்ந்த அந்த பெண், அதிர்ச்சியில் பலத்த குரலில் கத்தினார். இரவு நேரத்தில் தூக்கத்தில் இருந்த மற்ற பயணிகளும் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்தனர். பிற பயணிகளும் எழுந்திருப்பதைக் கண்ட டிரைவர் ஜான்சன், யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார். 

sexual

மறுநாள் பேருந்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த பெண், நேராக கேரளா காவல் நிலையம் சென்று கல்லடா டிராவல்ஸ் டிரைவர் மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கேரளா காவல் துறையினர், இந்த விஷயத்தில் அதிரடியாக களம் இறங்கி, கல்லடா டிராவல்ஸ் உரிமையாளர்  சுரேஷ் கல்லடாவையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.  அதன் பிறகு, கோட்டயத்தைச் சேர்ந்த டிரைவர் ஜான்சனையும் அவரின் உதவியாளர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. 
இந்த சம்பவத்தை அடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள கல்லடா டிராவல்ஸுக்கு சொந்தமான அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகையிட்டு தாக்கினார்கள்.