‘ஓசி டீ எல்லாம் நான் குடிக்கிறது இல்ல.. இந்தா காச புடி’.. டீக்கடைகாரருக்கு நெத்தியடி கொடுத்த பெரியவர்!

 

‘ஓசி டீ எல்லாம் நான் குடிக்கிறது இல்ல.. இந்தா காச புடி’.. டீக்கடைகாரருக்கு நெத்தியடி கொடுத்த பெரியவர்!

வயதானவர்களோ அல்லது கிழிந்த ஆடை போட்டுக் கொண்டு யாரோ வந்தாலோ பொதுவாக அவர்களைப் பிச்சைக்காரர்கள் என்று எண்ணி உண்ணுபதற்கு உணவு வாங்கி கொடுப்போம்.

வயதானவர்களோ அல்லது கிழிந்த ஆடை போட்டுக் கொண்டு யாரோ வந்தாலோ பொதுவாக அவர்களைப் பிச்சைக்காரர்கள் என்று எண்ணி உண்ணுபதற்கு உணவு வாங்கி கொடுப்போம். அதே போல ஒரு டீக்கடைக்காரர் ஓசியில் டீ கொடுத்ததற்கு, ஒரு பெரியவர் கொடுத்த பதில் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ttn

நேற்று காலை கோவை, திருமலைநாயக்கன் பாளையத்தில் உள்ள டீக்கடை ஒன்றுக்கு ஒரு முதியவர் சென்றுள்ளார். அவர் பழைய ஆடை அணிந்து கொண்டு, முகத்தில் தாடி , மீசையுடன் கையில் பை ஒன்று வைத்துக் கொண்டிருந்துள்ளார்.  அவரை பார்த்த கடைக்காரர் அவரை பிச்சைக்காரர் என்று எண்ணி ஒரு டீ கொடுத்து, ஓரமாக உட்கார்ந்து குடிக்கும் படி கூறியுள்ளார். அந்த பெரியவரைப் பார்த்ததும் கடையில் இருந்த அனைவரும்  ஒதுங்கி ஓரமாக சென்றுள்ளனர். 

ttn

கடைக்காரர் கொடுத்த டீயை வாங்கிக் கொண்ட பெரியவர், 10 ரூபாயைக் கொடுத்துள்ளார். அதற்கு அந்த கடைக்காரர் இல்லை.. காசு வேண்டாம் குடியுங்கள் என்று கூறியுள்ளார். அதனால் கடுப்பான அந்த பெரியவர்,  காசை வாங்காவிட்டால் டீயை வாங்கிக் கொள்ள மாட்டேன் என்று கோபமாகப் பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல், ” காசு கொடுக்காமல் ஓசியில் டீ குடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.. இந்தா காச புடி”  என்று டீக்கடைக்காரருக்கு பொட்டில் அறைந்தார் போலக் கூறியுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தலத்தில் பகிர்ந்துள்ளார். அந்த முதியவர் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறார்.