ஒ.பி.எஸ்-ன் 10வது பட்ஜெட், யாருக்கும் பத்தாத பட்ஜெட்! – மு.க.ஸ்டாலின் அதிரடி

ஒ.பி.எஸ்-ன் 10வது பட்ஜெட், யாருக்கும் பத்தாத பட்ஜெட்! – மு.க.ஸ்டாலின் அதிரடி

நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டுக்கு வழக்கம்போல் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த பட்ஜெட் குறித்து அளித்த பேட்டி விவரம் வருமாறு:

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, கடன் சுமை அதிகரிப்பு என்று யாருக்குமே பத்தாத பட்ஜெட்டாக உள்ளது என்று மு.க.ஸ்டாலின் ரைமிங்காக பேட்டி அளித்துள்ளார்.
நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டுக்கு வழக்கம்போல் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த பட்ஜெட் குறித்து அளித்த பேட்டி விவரம் வருமாறு:

budget

“நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வாசித்த 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. இந்த ஆட்சியின் பட்ஜெட்களில் நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, கடன் சுமைதான் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தொலைநோக்குத் திட்டங்களும் இல்லை, வளர்ச்சித் திட்டங்களும் இல்லை.

தமிழக பட்ஜெட்டில் அரசின் கடன் சுமை ரூ. 4.56  லட்சம் கோடி என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொருவரின் தலை மீதும் ரூ. 57 ஆயிரம் கடன் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய அரசை தமிழக அரசு பின்பற்றுவதற்கு இந்த பட்ஜெட் உரையே சாட்சி
2011ம் ஆண்டு திமுக ஆட்சி வரை 1 லட்சம் கோடியிலிருந்த கடன் தற்பொழுது மூன்று மடங்கு அதிகரித்து 4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இலாகாவிற்கு மட்டும் அதிகம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் மர்மம் என்ன? 
பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக டெல்டா அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு இங்கிருந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை டெல்லிக்கு அனுப்பி ஒரு கடிதத்தை கொடுத்ததாக செய்தி வந்தது.
அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்று சொல்லப்படவில்லை. இப்பொழுதும் சொல்கிறேன் இன்று மாலைக்குள் அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்று சொல்லியாக வேண்டும், அப்படி சொல்லவில்லை என்றால் விரைவில் அந்த கடிதத்தை நானே வெளியிடுவேன் ” என்றார்.