ஒவ்வொரு மாதமும் எதை தானம் செய்தால் பலன் கிடைக்கும்?

ஒவ்வொரு மாதமும் எதை தானம் செய்தால் பலன் கிடைக்கும்?

ஐப்பசி மாதத்தில் நடைப்பெறும் அன்னாபிஷேகம் மிக சக்தி வாய்ந்தது. தமிழ் மாதங்கள் பன்னிரெண்டு இருக்கும் போது ஏன் முன்னோர்கள் ஐப்பசி மாதத்தில் மட்டும் அன்னாபிஷேகம் செய்து வந்தார்கள்? ஒவ்வொரு மாதமும் என்ன பொருளை தானம் செய்தால் பலன்கள் கிடைக்கும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அதன் படி தமிழ் மாதங்கள் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம் எது எது என்று பார்ப்போம்!

சித்திரை மாதத்தில் நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம் போன்றவைகளை தானம் செய்யலாம்.

annabishekam

வைகாசி மாதத்தில் பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம் போன்றவைகளை தானம் செய்யலாம்.
ஆனி மாதத்தில் தேன், தேன் கலந்த உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
ஆடி மாதத்தில் வெண்ணெய் சம்பந்தப்பட்ட பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
ஆவணி மாதத்தில் தயிர், தயிர் சாதம் போன்ற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
புரட்டாசி மாதத்தில் சர்க்கரை கலந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
ஐப்பசி மாதத்தில் உணவு, ஆடை போன்ற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
கார்த்திகை மாதத்தில் பால், விளக்கு போன்ற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
மார்கழி மாதத்திப் பொங்கல் தானம் செய்ய வேண்டும்.

thanam

தை மாதத்தில் தயிர், தயிர் சம்பந்தப்பட்ட பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
மாசி மாதத்தில் நெய், நெய் கலந்த உணவுப் பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
பங்குனி மாதத்தில் தேங்காய், தேய்ங்காய் சாதம் போன்ற உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். இந்த வரிசையில் தானம் செய்து வந்தால் பலன்கள் பலமடங்கு பெருகும்.