ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; அதிமுக அரசு மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

 

ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; அதிமுக அரசு மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது

சென்னை: அ.தி.மு.க அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதாகவும் கூறப்படுகவதால், வழக்கை மூடி மறைக்க ஆளும் அரசு திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

pollachi accusers

இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அரசானை வெளியிட்ட போதும், முறைப்படி ஒப்படைக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தின் வீரியம் அடங்குவதற்குள்ளாக பெரம்பலூரில் ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி கொடுமைக்கே இன்னும் நீதி கிடைக்காத நிலையில், பெரம்பலூரில் பெண்களிடம் பாலியல் வன்முறை. அ.தி.மு.க அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.

பொள்ளாச்சி வழக்கை முடிந்தவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் விசாரித்து, ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு, பிறகு சி.பி.ஐ.யிடம் வழக்கு விசாரணையை ஒப்படைக்கலாம் என்றோ, பெரம்பலூர் வழக்கினை மூடி மறைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.-வை காப்பாற்றி விடலாம் என்றோ முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன் என கூறப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலிய கொடூர வழக்கை அதிமுக அரசு பொறுப்பற்ற முறையில் கையாண்டு வருவதாகவும், பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசு எவ்வித அக்கறையோ ஆர்வமோ காட்டாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

பொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ.யிடம் விரைந்து ஒப்படைக்கவும், பெரம்பலூர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்

இதையும் வாசிங்க

பொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பம்: ஆயுள் தண்டனைக்கு வழிவகுத்த வழக்குப்பதிவு!