ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சரின் வீட்டிலும் பல கோடி பதுக்கப்பட்டுள்ளது – சீமான்

ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சரின் வீட்டிலும் பல கோடி பதுக்கப்பட்டுள்ளது – சீமான்

ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சரிடன் வீட்டிலிலும் பலகோடி  பதுக்கி வைத்துள்ளனர். ஆனால்  இவருகள் 4000 கோடிக்கு வெளிநாட்டில் இருந்து முதலீடு கொண்டு வந்ததாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

மதுரையில் இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மோட்டர் வாகன உற்பத்தி பாதிப்புக்கு ஓலா, ஊபர் தான் காரணம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது, ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பேசுவது போல் இல்லை. சொந்தமாக கார் வாங்க முடியாத நிலைமைக்கு மத்திய அரசு மக்களை தள்ளி  விட்டிருக்கிறது. அதனால் தான் அனைவரும் ஓலா, உபரில் பயணிக்கின்றனர். 

seeman

ஆளுங்கட்சியை தாக்கி பேசுவதுதான் எதிர்க்கட்சி. திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அனைத்திற்கும் வெள்ளையறிக்கை கொடுத்திருக்கிறார்களா?  சாதியை வாக்காக தான்  திராவிட அரசியல் பார்க்கின்றது. ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சரிடன் வீட்டிலிலும் பலகோடி  பதுக்கி வைத்துள்ளனர். ஆனால்  இவருகள் 4000 கோடிக்கு வெளிநாட்டில் இருந்து முதலீடு கொண்டு வந்ததாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மண்ணின் மகத்துவ தலைவர்களாக இருக்கக்கூடிய காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், இம்மனுவேல்சேகர் சிலைகள்  கூண்டுக்குள் தான் இருக்கிறது. இறந்து போன எங்களது முன்னோர்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுக்கு எதற்கு 144 தடை உத்தரவு. முக்கிய அரசியல்வாதிகள் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வருவதில்லை, அப்படி அவர்கள் வந்தார்கள் என்றால் தேவர் சாதியினர் ஓட்டு அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை என்று கருதுகிறார்கள்” என்று கூறினார்.