ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல்…..பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்……

 

ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல்…..பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்……

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் மத்திய பட்ஜெட் உரையை தொடங்கினார். சுமார் 2 மணி நேரம் அவர் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி தலைமையிலான மத்திய அரசு தனது முந்தைய 5 ஆண்டு ஆட்சி காலத்தில் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு பட்ஜெட்டில் சலுகைகளை வழங்கியது. தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள மோடி இந்த பட்ஜெட்டிலும் வரி  விலக்கு சலுகைகளை அள்ளி வழங்குவார் என சாமானிய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குடியரசு தலைவருடன் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைசச்ர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்படி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து பட்ஜெட் பிரதிகள் நாடாளுமன்ற அவைக்குகள் கொண்டு வரப்பட்டது. மத்திய நிதியமைச்சர் சரியாக 11 மணிக்கு தனது பட்ஜெட் உரையை தொடங்கினார். 

நிர்மலா சீதாராமன்

ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் இந்தியாவுக்கு அரசு அதிக கவனம் செலுத்தும். குறைந்தபட்ச அரசு நிறைந்த ஆட்சி  என்பதை மத்திய அரசின் பார்வை என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.