“ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொண்ட நேர்மறை எண்ணம்”: ரஜினி பங்கேற்ற MAN VS WILD புரொமோ வீடியோ!

 

“ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொண்ட நேர்மறை எண்ணம்”: ரஜினி பங்கேற்ற MAN VS WILD புரொமோ  வீடியோ!

நிக் ஜானஸ்,  உள்ளிட்டோருடனும் விளையாட்டு வீரர்களில் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்ட பிரபலங்கள்  கலந்துகொண்டுள்ளனர். 

வனப்பகுதியில் சாகசங்களை நிகழ்த்திக்காட்டும் பியர் கிரில்ஸின்  MAN VS WILD என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அமெரிக்க நடிகர்கள் ஜூலியா ராபர்ட்ஸ், நிக் ஜானஸ்,  உள்ளிட்டோருடனும் விளையாட்டு வீரர்களில் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்ட பிரபலங்கள்  கலந்துகொண்டுள்ளனர். 

 

ttn

அந்த வகையில் சமீபத்தில்  MAN VS WILD நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இதற்காகச் சமீபத்தில்  பந்திபுரா புலிகள் காப்பகத்தில் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

ttn

பியர் கிரில்ஸுடன் ரஜினி  இரண்டு  நாட்கள் கலந்துகொண்டார்.அவருடன் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்தும்   கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாக டிஸ்கவரி தொலைக்காட்சி அறிவித்துள்ளது. 

இந்நிலையில்  பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த்துடனான பயணத்தின்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  ஓய்வில்லாத, நேர்மறை மற்றும்  விட்டுக்கொடுக்காத குணத்துடன் இருந்தார். அவர் மீது வீசப்பட்ட ஒவ்வொரு சவாலையும் அவர் ஏற்றுக்கொண்டது கண்கூடாக தெரிந்தது” என்று பதிவிட்டுள்ளார்.