ஒவ்வொருவருக்கும் அரசை விமர்சிக்க உரிமை உண்டு: ஏ.ஆர். முருகதாஸ் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

 

ஒவ்வொருவருக்கும் அரசை விமர்சிக்க உரிமை உண்டு: ஏ.ஆர். முருகதாஸ் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

அரசை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அரசை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படமான சர்காரில் அரசு கொடுத்த இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை பார்த்த விஜய் ரசிகர்களும் தங்களது வீடுகளில் இருக்கும் இலவச பொருட்களை உடைப்பது, எரிப்பது போன்ற வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

இதற்கிடையே இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதை தொடர்ந்து முருகதாஸ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இது தன் கருத்துச் சுதந்திரம், மன்னிப்பு கோர முடியாது எனவும் இனிவரும் படங்களில் இதுபோன்ற காட்சிகளை அமைக்கப்போவதில்லை என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கைகளுக்கு பொதுமக்கள் எதிர் கருத்து தெரிவிக்கக்கூடாதா? அரசை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்காலத்தில் அரசை விமர்சித்து படம் எதுவும் எடுக்கக்கூடாது என்று இயக்குனரிடம் உத்தரவாதம் கேட்பது என்பது, அவரை அரசு மிரட்டுவதற்கு சமம் என தீர்ப்பளித்து முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தும் உத்தரவிட்டனர்.