ஒழுங்கா வேலை பாக்குறது கிடையாது! ஐடி விங் நிர்வாகிகளை நீக்கிய திமுக!! 

 

ஒழுங்கா வேலை பாக்குறது கிடையாது! ஐடி விங் நிர்வாகிகளை நீக்கிய திமுக!! 

திமுக மாவட்ட, மாவட்ட துணை மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை நீக்கி திமுக உத்தரவிட்டுள்ளது

திமுக மாவட்ட, மாவட்ட துணை மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை நீக்கி திமுக உத்தரவிட்டுள்ளது

தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திரு.பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜ எம்.எல்.ஏ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட, மாவட்ட துணை மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 

it wing

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட முனைவர் செ.ஜெகநாதன், தஞ்சை வடக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளரான இரா. திருமுருகன், திருவிடைமருதூர் தொகுதி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அருண் கார்த்திக்,  திருவையாறு தொகுதி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த முத்துக்குமரன், தியாகராய நகர் தொகுதி ஒருங்கிணைப்பாளார் சூரிய குமார், பல்லாவரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் புலன் மற்றும் கீழ்வேளூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் முகமது ரியாஸ் ஆகியோர் அணியின் செயல்பாடுகளில் சரிவர ஈடுபடாததால் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.