ஒழுங்கா நடக்க ரோடு இல்ல… உங்களுக்கு 8 வழி சாலை கேக்குதோ… ரோட்டில் இறங்கிய பள்ளி மாணவர்கள்..!

ஒழுங்கா நடக்க ரோடு இல்ல… உங்களுக்கு 8 வழி சாலை கேக்குதோ… ரோட்டில் இறங்கிய பள்ளி மாணவர்கள்..!

பயண நேரத்தைக் குறைக்கிறதுக்காகத்தான் சேலம்,சென்னை எட்டு வழி சாலை போடுறோம்,சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ஆறு வழி சாலை என்று ஆளும் அரசு ஒரு பக்கம் அடம்பிடித்துக்கொண்டிருக்கிறது.எங்கள் வாழ்வாதாரங்களை  அழிச்சு ரோடு போட அனுமதிக்க மாட்டோம் என்று பாதிக்கப்பட்ட மக்களும்,சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆனாலும் அரசு தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொள்வதாக இல்லை!
இதே அரசிடம் வெளியூருக்கு போய் படிக்க போதுமான ரோடு வசதி இல்லை என்று பல ஆண்டுகளாகப் போராடும் கொடுமையும் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை என்ற சூழலில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோடாங்கிபட்டி கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டது.தற்போது அந்த சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு படுமோசமாக காட்சியளிக்கிறது.இதனால் வெளியூர் சென்று படிக்கும் பள்ளி மாணவர்கள்,வெளியூருக்கு வேலைக்கு போகிறவர்கள் என பலரும்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களோடு சேர்ந்து,பெண்கள் உட்பட கிராமவாசிகள் 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுவரை ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை!?