ஒர்க் ஃபிரம் ஹோமில் யாரும் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை! அலுவலகத்திற்கு வந்த பின் ஆப்பு வைக்கவிருக்கும் நிறுவனங்கள்…

 

ஒர்க் ஃபிரம் ஹோமில் யாரும் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை! அலுவலகத்திற்கு வந்த பின் ஆப்பு வைக்கவிருக்கும் நிறுவனங்கள்…

ஒர்க் ஃபிரம் ஹோமில் யாரும் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை என்று பல்வேறு தனியார் நிறுவனங்கள் குற்றம் சாட்ட தொடங்கிவிட்டன. 

வேலை செய்ய தெரியாமல், அக்கம் பக்கத்தில் டவுட் கேட்டு செய்து வேலையை தக்க வைத்துக்கொண்டவர்களுக்கு இந்த ஒர்க் ஃபிரம் ஹோமை சமாளிக்க முடியவில்லை. அதனால, நிறைய வேலை பெண்டிங்கில் இருப்பதாகவும், அத்துணை வேலையும் வேலை தெரிந்தவன் தலையில் விழுவதாகவும் தனியார் நிறுவனங்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதாவது ஒர்க் ஃபிரம் ஹோமில் பணியாற்றும் 100 பேரில் 40 பேரும்தெண்டமாக சம்பளம் தருவதாக சூசகமாக சொல்லிவிட்டன.

 work from home

வேலை செய்ய தெரியாதவர்கள் எப்போது இந்த ஒர்க் ஃபிரம் ஹோம் முடியும் என காத்துக்கொண்டிருக்கின்றனர். கொடுத்த வேலையை எப்போது முடிப்பீர்கள் என நிறுவனங்கள் கேட்டால்,  எப்படி செய்யுறதுனு தெரியல சார்…. என சிலரும், இதோ வேலை போய்ட்டு இருக்கு என சிலரும் மழுப்புகின்றனர். ஒழுங்காக வேலை செய்பவர்கள், எல்லாம் என் தலையிலேயே வந்து விழுகிறது என புலம்புகின்றனர். 

 work from home

ஒர்க் ஃபிரம் ஹோம்கள் முடிவடைந்து, முழுநேர பணிக்கு திரும்பும்போது, இதைக் காரணம் காட்டியே பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யக்கூடும் என சொல்லப்படுகிறது. ஆனால் ஆட்குறைப்புக்கு உண்மையான காரணம் இதுவாக இருக்காது. இன்னொரு முறை கொரோனா போன்றதொரு நோய் பரவல் ஏற்பட்டால், நிறுவன வளாகத்துக்குள்ளேயே தங்க வைத்து வேலை வாங்குவதற்கான முடிவை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது எனக் கூறப்படுகிறது.