ஒரே வருஷம்…. ரூ.39,354 கோடி லாபம் பார்த்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

 

ஒரே வருஷம்…. ரூ.39,354 கோடி லாபம் பார்த்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.39,354 கோடி ஈட்டியுள்ளது.

நம் நாட்டின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2019-20ம் நிதியாண்டில் (2019 ஏப்ரல்-2020 மார்ச்) நிகர லாபமாக ரூ.39,354 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 0.59 சதவீதம் குறைவாகும். 2018-19ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபமாக ரூ.39,588 கோடி ஈட்டியிருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கடந்த மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் 38.73 சதவீதம் சரிந்து ரூ.6,348 கோடியாக குறைந்தது. 2019 மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் ரூ.10,362 கோடியாக உயர்ந்து இருந்தது. கொரோனா வைரஸ் பரவலால் கச்சா எண்ணெய் விலை சரிவு கண்டதால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மொத்த வருவாய் 2.50 சதவீதம் குறைந்து ரூ.1.51 லட்சம் கோடியாக குறைந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.53,125 கோடி மதிப்பிலான இந்தியாவின் மிகப்பெரிய உரிமை பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. 2020 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிலுவையில் உள்ள கடன் ரூ.3.36 லட்சம் கோடியாக உள்ளது. அதேவேளையில், ரொக்கம் மற்றும் ரொக்கத்துக்கு சமமான தொகை ரூ.1.75 லட்சம் கோடியாக இருந்தது.