ஒரே வங்கி ஆக இருக்கும் 3 வங்கிகள்: மத்திய அமைச்சர் தகவல்

 

ஒரே வங்கி ஆக இருக்கும் 3 வங்கிகள்: மத்திய அமைச்சர் தகவல்

விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய 2 வங்கிகளை பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைத்து ஒரே வங்கியாக ஆக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

புதுடெல்லி: விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய 2 வங்கிகளை பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைத்து ஒரே வங்கியாக ஆக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

பொதுத்துறையை சேர்ந்த தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிப் பணியாளர்களின் 9 சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இருப்பினும், இந்த முயற்சியில் இருந்து மத்திய அரசு பின்வாங்கவில்லை. 

ravishankar

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் விஜயா வங்கி, தேனா வங்கியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாங்க் ஆப் பரோடாவிற்கு மாற்றப்படுவார்கள் என்றும் இந்த இணைப்பு நடவடிக்கையில் ஆட்குறைப்பு செய்யப்படாது என்றும் தெரிவித்தார். 

மேலும், பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கிகளின் வரிசையில் பரோடா வங்கியை மூன்றாவது இடத்தில் முன்னிறுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.