ஒரே மாதிரியான உணவை சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு!

 

ஒரே மாதிரியான உணவை சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு!

ஒரே மாதிரியான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதில் தாமதம் ஏற்படும். அனைத்து வகையான உணவுகளை சாப்பிடுபவர்களால் தான் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.

ஒரே மாதிரியான உணவை சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு!

சிலர் தினமும் ஒரே மாதிரியாக  பொறித்த உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் சாப்பிடுகின்றனர். அப்படி சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல், ஒரே வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டாலும் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.
ஊட்டச்சத்து குறைப்பாடு 
நம் உடல் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை மேக்ரோ மற்றும் மைக்ரோ ஊட்டச்சத்துக்கள் தருகின்றன. மேக்ரோ ஊட்டச்சத்துக்களில் மூன்று வகைகள் உள்ளது. அவை புரோட்டின், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள். மீதமுள்ள அனைத்து சத்துக்களும் மைக்ரோ ஊட்டச்சத்துக்கள். பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை  சாப்பிடும் போழுது  இந்த ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆனால், சில வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து வகையான காய்கறி மற்றும் பழங்களை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம்.
குடல் ஆரோக்கியம் பாதிப்பு
பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட்டால்தான் நம் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியா உருவாகும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும்,  ஒட்டுமொத்த செரிமானத்திற்கும் நல்லது. புளித்த உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியான விகிதத்தில் சாப்பிட்டால் மட்டுமே குடல் ஆரோக்கியம் மேம்படும். 
உடல் எடை குறைவதில் சிக்கல்

ஒரே மாதிரியான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதில் தாமதம் ஏற்படும். அனைத்து வகையான உணவுகளை சாப்பிடுபவர்களால் தான் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். 

அதிக ஊட்டச்சத்து ஆபத்து
அதேபோல், சில ஊட்டச்சத்துக்களை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். உதாரணமாக அதிகப்படியான மஞ்சளை உணவில் சேர்த்துக்கொண்டால் அது உங்கள் கல்லீரலின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.