ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இறப்பு….. காபி டே நிறுவனர் மறைந்த சித்தார்த்தாவின் தந்தை காலமானார்…

 

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இறப்பு….. காபி டே நிறுவனர் மறைந்த சித்தார்த்தாவின் தந்தை காலமானார்…

காபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தா இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் நேற்று அவரது தந்தை கங்கையா ஹெக்டேவும் உடல் நலக் குறைவால் காலமானார்.

இந்தியா முழுவதும் பிரபலமான சங்கலி தொடர் வர்த்தக நிறுவனமான காபி டேயின் நிறுவனத்தின் நிறுவனரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான  வி.ஜி. சித்தார்த்தா கடந்த மாதம் 29ம் தேதி ஆற்றில் குதித்து தற்கொலை கொண்டார். அவரது உடல் கடந்த 31ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதிகாரிகளின் தொந்தரவு, கடன் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். வி.பி. சித்தார்த்தாவின் மறைவால் அவரது குடும்பம் கடும் சோகத்தில் உள்ளது.

வி.ஜி. சித்தார்த்தா

இந்நிலையில், நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வி.ஜி. சித்தார்த்தாவின் தந்தை கங்கையா ஹெக்டே நேற்று காலமானார். மைசூரில் உள்ள சாந்தவேரி கோபால கவுடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கங்கையா ஹெக்டே சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு சிக்மகளூரில் இன்று நடைபெற உள்ளது. வி.ஜி. சித்தார்த்தா இறந்த ஒரு மாதத்துக்குள் அவரது தந்தை கங்கையா ஹெக்டேவும் மறைந்தது அவரின் குடும்பத்தினருக்கு பெரிய அடியாக உள்ளது.

காபி டே

சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு காபி எஸ்டேட்டில் தோட்டக்காரராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த கங்கையா ஹெக்கே குறுகிய காலத்திலேயே வெற்றிகரமான வர்த்தகராக மாறி விட்டார். அவர் அன்று போட்ட சிறு விதைதான் இன்று காபி டே பெரிய ஆலமரமாக உருவெடுத்து நிற்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.