ஒரே நேரத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிடக் கூடிய அம்சம் விரைவில் அறிமுகம்

 

ஒரே நேரத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிடக் கூடிய அம்சம் விரைவில் அறிமுகம்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் ஸ்டோரி பதிவிடக் கூடிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் ஸ்டோரி பதிவிடக் கூடிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ஸ்டோரீஸ் என்பது மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். இதே அம்சம் ‘ஸ்டேட்டஸ்’ என்ற அம்சமாக வாட்ஸ்அப்பில் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோரி மற்றும் ஸ்டேட்டஸ் இரண்டுமே மக்களிடையே மிகவும் பிரபலமான அம்சங்களாகும். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சங்களை தினசரி 50 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுக்க பயன்படுத்தி வருகிறார்கள்.

instagram

இந்த நிலையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் ஸ்டோரி பதிவிடக் கூடிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பேஸ்புக்கில் நீங்கள் ஸ்டோரி வைக்கும்போது கிராஸ்-போஸ்ட் முறையில் அதே பதிவை இன்சஸ்டாகிராம் ஸ்டோரியாகவும் நொடிப்பொழுதில் வைக்கலாம். இதனால் ஒரே பதிவை தனித்தனியாக இரண்டு தளங்களிலும் வைக்க நேரிடும்போது இந்த கிராஸ் போஸ்ட் அம்சம் பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.