ஒரே நேரத்தில் கர்ப்பமாகி, ஒரே நேரத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட ஒரே ஹாஸ்பிட்டல் நர்ஸ்கள்!

 

ஒரே நேரத்தில் கர்ப்பமாகி, ஒரே நேரத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட ஒரே ஹாஸ்பிட்டல் நர்ஸ்கள்!

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 செவிலியர்களுக்கும் தற்போது குழந்தை பிறந்துள்ளது.

ஒரே நேரத்தில் கர்ப்பமாகி, ஒரே நேரத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட ஒரே ஹாஸ்பிட்டல் நர்ஸ்கள்!

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 செவிலியர்களுக்கும் தற்போது குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ளது போர்ட்லாண்ட் பகுதியிலுள்ள மைன் மெடிக்கல் என்ற மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பணியாற்றும் ஒன்பது செவிலியர்களும், கடந்த ஆண்டு இறுதியில் ஒரே நேரத்தில் கர்ப்பமானார்கள். அப்போது அந்த மருத்துவமனை, ‘எங்கள் மருத்துவ மையத்தின் 9 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்ப மாகியுள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலையில் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்து கர்ப்பத்துடன் இருக்கும் செவிலியர்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர். 

இந்நிலையில் தற்போது அந்த 9 செவிலியர்களுக்கும் குழந்தை பிறந்ததை அறிவித்து, அந்த 9 குழந்தைகளின் புகைப்படத்தையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.