ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதல் திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர்: கதையை கேட்டு தலை சுற்றி போன போலீசார்!?

 

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதல் திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர்: கதையை கேட்டு தலை சுற்றி போன போலீசார்!?

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம்: ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஒருவர்  தனது 19 வயது மகளை காணவில்லை என்று தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை தேடி வந்துள்ளனர். 

love

சில தினங்களுக்கு முன்பாக காணாமல் போன அந்த பெண் தாராபுரம் பேருந்து நிலையத்தில் ஒரு ஆண்  மற்றும் பெண்ணுடன் நின்று கொண்டிருந்ததாகப் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இங்கு விரைந்து சென்ற  போலீசார், அந்த மூவரையும் மடக்கிப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

marriage

அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அப்பகுதியில்  வசித்து வந்த இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். இதில் ஒருவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தவர். மற்றொருவர் 19 வயதான இளம்பெண்.   இந்த இரு பெண்களுக்கும் ஆட்டோ ஓட்டுநரின்  உண்மை முகம் தெரியவர  யார் காதலனை திருமணம் செய்து கொள்வது என்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரையும் ஏமாற்றி விடலாம் என்று ஆட்டோ ஓட்டுநர்  முடிவெடுத்துள்ளார். இதையறிந்து கொண்ட இந்த பெண்கள்  இருவரையும் திருமணம் செய்து கொள்  என்று கூற ஆட்டோ ஓட்டுநருக்கு  இந்த டீல் பிடித்துள்ளது.

marriage

இதையடுத்து இரு பெண்களையும் பழனிக்கு அழைத்துச் சென்று ஒரே நேரத்தில் இருவருக்கும் தாலி கட்டி அழைத்து வந்துள்ளார். தாராபுரத்திலிருந்து கோவை செல்ல முடிவெடுத்த அவர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போந்து  தான் போலீசிடம் சிக்கியுள்ளனர்.

கதையை கேட்டு தலை சுற்றி போன போலீசார் பெண்களின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்க அவர்கள் காவல் நிலையம் வந்துள்ளனர். ஆனால் பெண்கள் இருவருமே பெற்றோருடன் செல்ல மறுத்ததோடு, காதல் கணவர் தான் வேண்டும்  என்று அடம்பிடிக்க, வேறு வழியில்லாமல் பெற்றோர்களும். போலீசும் அவர்களை வழியனுப்பி வைக்க வேண்டிய மோசமான சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.   இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.