ஒரே நாளில் 30 கோடி செலவு செய்த கிராம மக்கள்! திணறிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!

 

ஒரே நாளில் 30 கோடி செலவு செய்த கிராம மக்கள்! திணறிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!

பணம் கொட்ட ஆரம்பிச்சா கூரையை பிய்ச்சுக்கிட்டு கொட்டும்’ என்கிற வார்த்தை யாருக்கு பொருந்துதோ இல்லையோ வெங்காயத்தை விவசாயம் செய்து வருபவர்களுக்கு தற்போது அத்தனை கச்சிதமாக பொருந்தி வருகிறது

பணம் கொட்ட ஆரம்பிச்சா கூரையை பிய்ச்சுக்கிட்டு கொட்டும்’ என்கிற வார்த்தை யாருக்கு பொருந்துதோ இல்லையோ வெங்காயத்தை விவசாயம் செய்து வருபவர்களுக்கு தற்போது அத்தனை கச்சிதமாக பொருந்தி வருகிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று நாடு பொருளாதார மந்தநிலையை சந்தித்து நொந்து நூடூல்ஸ் ஆகியிருக்கிற நிலைமையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பொருளாதாரம் எல்லாம் தினம் தினம் எகிறி வரும் பெட்ரோல், டீசல் விலையினால் கதறியழுது கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் 30 கோடி ரூபாய்க்கு ஒரே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வாகனங்களை வாங்கி குவித்துள்ளார்கள்.  

tractor

மகாராஷ்டிராவில் கல்வான் எனும் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் வழக்கமாக வெங்காயத்தைப் பயிரிட்டு வருவார்கள். இந்த முறை அவர்களுக்கு வழக்கமானதை விட வெங்காய விளைச்சல் அதிகரித்து நல்ல விளைச்சலைக் கொடுத்தது. திடீரென நாடு முழுவதும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, வெங்காய விலை உயர்ந்ததால் இந்த பகுதியில் இருக்கும் விவசாயிகள் நன்கு சம்பாதித்தனர். இதனையடுத்து, நவராத்திரி நாட்களில் சொல்லி வைத்தாற் போல் ஒரே நாளில் 250 ட்ராக்டர்கள், 500 இருசக்கர வாகனங்கள், 21 கார்கள் என இந்த கிராமத்து மக்கள் வாங்கியுள்ளனர். அந்த பகுதியில் இருந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எல்லாம் ஆனந்த கண்ணீர் விடாத குறை தான்!