ஒரே நாளில் மோதிக் கொள்ளும் ஜி.வி.பிரகாஷின் இரண்டு படங்கள்! 

 

ஒரே நாளில் மோதிக் கொள்ளும் ஜி.வி.பிரகாஷின் இரண்டு படங்கள்! 

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகராக, ஹீரோ என்று பன்முகம் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து ஐந்து படங்களைக் கைவசம் வைத்துள்ள இவர் தெலுங்கில் கடந்த 2011ஆம் ஆண்டு 100% லவ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் நீண்ட நாட்களாக ரிலீஸுக்குக் காத்துள்ளது.  

இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷும், சித்தார்த் நடித்துள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை. தற்போது இந்த படமும்  அதே தேதியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.