ஒரே நாளில் டெல்லியை பின்னுக்கு தள்ளிய தமிழகம்…. கொரோனாவின் உச்சகட்ட பாதிப்பில் மகாராஷ்டிரா….

 

ஒரே நாளில் டெல்லியை பின்னுக்கு தள்ளிய தமிழகம்…. கொரோனாவின் உச்சகட்ட பாதிப்பில் மகாராஷ்டிரா….

கொரோனா பாதிப்பில் டெல்லியை பின்னுக்கு தள்ளி தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை பரவுவதை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கொரோனா வைரஸ்

நம் நாட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லியில்தான் கொரோனாவின் பாதிப்பு கடுமையாக உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. தமிழகம் மற்றும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தலா ஆயிரத்தை தாண்டி விட்டது. நேற்று முன்தினம் இரண்டாவது இடத்தில் இருந்த டெல்லியை நேற்று தமிழகம் பின்னுக்கு தள்ளியது.

நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர்

கொரோனா பாதிப்பில் டாப் 3 மாநிலங்கள்

மாநிலங்கள்    கொரோனா பாதித்தவர்கள்
மகாராஷ்டிரா    1,895
தமிழகம்             1,075
டெல்லி               1,069