ஒரே நாடு – ஒரே ரேஷன் விரைவில் அமலுக்கு வரும்: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் அறிவிப்பு!

 

ஒரே நாடு – ஒரே ரேஷன் விரைவில் அமலுக்கு வரும்: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் அறிவிப்பு!

அதேபோல் பல்வேறு துறைகளுக்கு ஏற்ப பல்வேறு புதிய திட்டங்கள்  அறிவிக்கப்பட்டு வருகிறது

2020-2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இதில் உயர்கல்வி துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு, முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி கட்டண சலுகை தொடரும் என்றும் இதற்காக ரூ.506 கோடி ஒதுக்கீடு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு துறைகளுக்கு ஏற்ப பல்வேறு புதிய திட்டங்கள்  அறிவிக்கப்பட்டு வருகிறது. 

 

ttn

 

 

  •  தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • காவல்துறைக்கு – 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  •  நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி ஒதுக்கீடு.
  • தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.
  • சுகாதாரத்துறை – 15,863 கோடி ரூபாய்  ஒதுக்கீடு
  •  தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ttn

  • அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூ.500 கோடி ஒதுக்கீடு 
  • மின்சாரத் துறை 20,115.58 கோடி ஒதுக்கீடு 
  • சாலை பாதுகாப்பு ரூ.500 கோடி ஒதுக்கீடு 
  • நெடுஞ்சாலைத்துறையில் சாலை ப் பாதுகாப்பிற்குத் தனியாக பிரிவு உருவாக்கப்படும்
  • 5 புதிய மாவட்டங்களில் ரூ.550 கோடியில் பெருந்திட்ட வளாகம் அமைக்க கண்டறியும் பணி தொடக்கம்

ttn

  • தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள்
  • அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப் பரிமாற்ற முறையில் பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை
  • ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
  • நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,403.17 கோடி நிதி
  • பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூ.1,360.11 கோடி ஒதுக்கீடு
  • சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும்.