ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்ட அறிவிப்பு கடிதமே வரவில்லை… மோடி மீது பாயும் மேற்கு வங்க அரசு!

 

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்ட அறிவிப்பு கடிதமே வரவில்லை… மோடி மீது பாயும் மேற்கு வங்க அரசு!

மத்திய அரசு கொண்டு வர உள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இணையப் போவது இல்லை என்று மேற்கு வங்க அரசு முடிவு செய்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் செல்லுபடியாகும் ஒரே ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் எந்த பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த பகுதியிலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த திட்டத்தை ஏற்பதாக அறிவித்துள்ளன.

ration-shop-67

இந்த நிலையில் இந்த திட்டத்தில் சந்தேகம் இருப்பதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில உணவுத் துறை அமைச்சர் ஜோதி பிரியா மாலிக் கூறுகையில், “நாங்கள் இன்னும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் கடிதத்தை பெறவில்லை. இந்த திட்டத்தை பற்றி நாங்கள் கேள்விபட்ட வகையில் பல்வேறு சந்தேகங்கள், கருத்து வேறுபாடுகள் உள்ளன. 

jyoti priya mallick

மேற்கு வங்கத்தில் கடந்த 2018ம் ஆண்ட காத்யா சதி எனும் உணவு பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு ரூ.200 கோடியை மத்திய அரசு எங்களுக்கு கொடுக்குமா? ஏற்கனவே மத்திய அரசு எங்களுக்கு ரூ.5000 கோடி பாக்கி வைத்துள்ளது. நிலுவைத் தொகை தந்த பிறகே மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்திலும் இணைவது பற்றி சிந்திக்க முடியும்” என்றார்.
மேற்கு வங்க அரசு ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த சுகாதார சேவை திட்டமான ஆயுஷ்மான் பாரத், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000ம் வழக்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டங்களிலிருந்து விலகி உள்ளது. தற்போது ஓரே ரேஷன் திட்டத்துக்கும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இணைய மாநில அரசுகளுக்கு வருகிற ஜூன் 30 வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.