ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும்: அமைச்சர் செல்லூர் ராஜு உறுதி!

 

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும்: அமைச்சர் செல்லூர் ராஜு உறுதி!

பிற மாநிலத்திலிருந்து தமிழகத்தில் வருபவர்கள் நியாய விலை கடைகளில் எந்தவித இடையூறும் இன்றி பொருட்களை வாங்கும் திட்டம்  விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

kamaraj

டெல்லியில் நடந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழக பொதுப்பகிர்வுத் திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும்  ஏற்படாத வகையில், பிற மாநிலத்திலிருந்து தமிழகத்தில் வருபவர்கள் நியாய விலை கடைகளில் எந்தவித இடையூறும் இன்றி பொருட்களை வாங்கும் திட்டம்  விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதற்கு மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பியுமான வைகோ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பெயர் அளவுக்குக்கூட எதிர்க்காமல் மத்திய அரசின் அழுத்தத்திற்குத் தமிழக அரசு அடிபணிந்து இருப்பதையே காட்டுகிறது என்று சாடினார். 

sellur raju

இந்நிலையில், ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் கண்டிப்பாக இணையும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளாரதொடர்ந்து பேசியுள்ள அவர், ‘எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் நிர்ணயித்த விலையில் தான் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்குவதால் தட்டுப்பாடு ஏற்படாது. திட்டம் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசிடம் விரிவாகக் கேட்டறிந்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.