ஒரே நாடு ஒரே (ரிலையன்ஸ்) கம்பெனி. ஒரே நாடு ஒரே ஒரு (பாஜக) கட்சி!

 

ஒரே நாடு ஒரே (ரிலையன்ஸ்) கம்பெனி. ஒரே நாடு ஒரே ஒரு (பாஜக) கட்சி!

வெள்ளாமை போட்டவன் வெள்ளையப்பன், அதை நோகாம தின்பவன் திண்ணையப்பன் கதையாகிவிடும். ஒரே ரேஷன் அட்டையோடு இவர்கள் நிறுத்தப்போவதில்லை. ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கட்சி, ஒரே நாடு ஒரே ஒரு (ரிலையன்ஸ்) கம்பெனி, ஒரே நாடு ஒரே ஒரு (பாஜக) கட்சி என கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள்.

தன்னுடைய வழக்கமான சிரிப்பே வராத மொக்கை ஒன்லைனர்களை பயன்படுத்தி மேடை நாடகம் போடமுடியாத நிலையில் இருக்கும் எஸ்.வி.சேகர், அவ்வப்போது அவற்றை  பயன்படுத்தி போஸ்ட்டாக போட்டு காலத்தை ஓட்டிவருகிறார். அன்னாரின் லேட்டஸ் போஸ்ட் கீழ்க்கண்டவாறு இருக்கிறது “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்ட் இதிலென்ன பிரச்சினை.ஒரே வீடு ஒரே மனைவி இப்படி சட்டம் போட்டாதான் நம்மாளுங்க சிலருக்கு பிரச்னை வரும். அதை ஏத்துக்க முடியாதுன்னு தெரியும்”. அதாவது, பாஜகவின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுக்கு திட்டத்துக்கு(ம்) சேகர் சாமரம் வீசுகிறார்.

PDS in TN

‘நீ அரிசி எடுத்துகிட்டு வா, நான் உமிய எடுத்துகிட்டு வர்றேன், ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதி தின்போம்’ என்பதன் நவீன வடிவம்தான் இந்த ஒரே ரேஷன் கார்டு திட்டம். தமிழகத்தில் 95% ரேஷன் அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. இந்திப்பேசும் சில மாநிலங்களில் இன்னும் ரேஷன் அட்டையே முழுமையாக வழங்கப்படவில்லை. வளர்ந்த மாநிலங்களையும், தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கும் சில இந்திப்பேசும் மாநிலங்களையும் எப்படி ஒரே தட்டில் வைக்கமுடியும்? வெள்ளாமை போட்டவன் வெள்ளையப்பன், அதை நோகாம தின்பவன் திண்ணையப்பன் கதையாகிவிடும். ஒரே ரேஷன் அட்டையோடு இவர்கள் நிறுத்தப்போவதில்லை. ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கட்சி, ஒரே நாடு ஒரே ஒரு (ரிலையன்ஸ்) கம்பெனி, ஒரே நாடு ஒரே ஒரு (பாஜக) கட்சி என கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள். ஜாக்கிரதை!