ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தை மறுபடியும் எழுப்பும் பா.ஜ.க…… ஜீரோ நேரத்தில் கேட்க சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்த பா.ஜ.க. பெண் எம்.பி…..

 

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தை மறுபடியும் எழுப்பும் பா.ஜ.க…… ஜீரோ நேரத்தில் கேட்க சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்த பா.ஜ.க. பெண் எம்.பி…..

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜீரோ நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க பா.ஜ.க. பெண் எம்.பி. சரோஜ் பாண்டே சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்தார்.

பூஜ்ய நேரம் என்பது நம் நாட்டு நாடாளுமன்றத்தில் பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி நேரத்துக்கும், அன்றைய நாளின் முக்கிய விவாதத்துக்கும் இடையில் இருக்கும் இடைப்பட்ட நேரத்தை பொறுத்து நடத்தப்படுவதால் இதற்கு பூஜ்ய நேரம் அல்லது ஜீரோ நேரம் எனப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் கேட்க இருக்கும் கேள்விகளை அதற்கு முன்கூட்டியே சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும். உறுப்பினர்களின் கேள்விகளை அனுமதிப்பது அல்லது மறுப்பது சபாநாயகரின் இறுதி முடிவாகும்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

கடந்த சில மாதங்களாக எந்தவித சத்தமும் இல்லாமல் இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பா.ஜ.க.வின் முழக்கம் தற்போது மீண்டும் கேட்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தை எழுப்ப பா.ஜ.க. பெண் எம்.பி. சரோஜ் பாண்டே சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்தார். கடந்த பிப்ரவரி 4ம் தேதியும், ஜீரோ நேரத்தில் இதே விவகாரத்தை எழுப்ப சபாநாயகரிடம் சரோஜ் பாண்டே நோட்டீஸ் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி நடைபெற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் ஐடியா குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் அந்த கூட்டத்தை புறக்கணித்தன. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின்படி, நாடாளுமன்றத்துக்கும், மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்