ஒரே நாடு ஒரே கார்டு திட்டம் ஏதும் இல்லை!  மத்திய அரசு அறிவிப்பு

 

ஒரே நாடு ஒரே கார்டு திட்டம் ஏதும் இல்லை!  மத்திய அரசு அறிவிப்பு

ஆதார், பேன், டிரைவிங், வாக்காளர் அடையாள அட்டை என பல கார்டுகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உள்ளன. ஒரே நாடு ஒரே ரேஷன் போல, ஒரே நாடு ஒரே கார்டு வழங்கும் திட்டம் மத்திய அரசுக்கு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அதுபோல எந்த ஒரு திட்டமும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

bjb

நாடாளுமன்ற மக்களவையில் இன்று இந்த தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “தேசிய மக்கள் தொகை பதிவு 2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற உள்ளது. 

aadhar

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்திய குடியுறிமை சட்டம் 1955 பிரிவு 14ஏ இந்திய குடிமகன் அனைவரும் கட்டாயம் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. இதன் அடிப்படையில் பெயர் பதிவை 2010, 2015ம் ஆண்டுகளில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. தற்போது தேசிய மக்கள் தொகை பதிவு நடத்தப்பட உள்ளது. தற்போதைய சூழ்நிலைப் படி ஒரே கார்டு அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படவில்லை” என்றார்.