ஒரே தொகுதியை கேட்கும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக தலைமை!

 

ஒரே தொகுதியை கேட்கும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக தலைமை!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. திமுக கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரசுக்கு 25 தொகுதிகளும் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல, முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரே தொகுதியை கேட்கும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக தலைமை!

இன்னும் த.வா.க மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் வழங்கப்பட உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தவிர்த்து மொத்தம் 177 இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன? திமுக வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்? என்பது குறித்த மொத்த தகவல்களையும் திமுக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே தொகுதியை கேட்கும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக தலைமை!

இந்த நிலையில், திமுக பெரும் சிக்கலான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதியை காங்கிரஸ் கேட்கிறதாம். அதே போல திமுக போட்டியிட திட்டமிட்டிருந்த குடியாத்தம், கீழ்வேளூர் தொகுதிகளை சி.பி.எம் கட்சி கேட்கிறதாம்.

ஒரே தொகுதியை கேட்கும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக தலைமை!

இதுமட்டுமில்லாமல், அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக பிரமுகர்கள் 3 பேர் முயற்சித்துக் கொண்டிருக்கும் சூழலில் அதை காங்கிரஸ் கேட்கிறதாம். வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளை முஸ்லீம் லீக் கட்சியும் மனித நேய மக்கள் கட்சியும் கேட்பதாக தெரிகிறது. பல தொகுதிகளுக்கு இவ்வாறு போட்டி நீடிப்பதால், கூட்டணி கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை கொடுப்பதா? அல்லது திமுக வேட்பாளர்களையே களமிறக்குவதா? என்ற குழப்பத்தில் திமுக தலைமை இருக்கிறது.