ஒரே தேசிய கொடி, பறவை, விலங்கு இருக்கும்போது ஒரே மொழி இருந்தால் என்ன பிரச்னை – பிக்பாஸ் காயத்ரி ரகுராம்

 

ஒரே தேசிய கொடி, பறவை, விலங்கு இருக்கும்போது ஒரே மொழி இருந்தால் என்ன பிரச்னை – பிக்பாஸ் காயத்ரி ரகுராம்

பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்தவாரம் ஒரே நாடு ஒரே மொழி அது இந்தி மொழி என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அறிவித்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘இந்தி நாளை’யொட்டி, இந்திதான் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கவல்ல தகுதி இந்திக்குத்தான் உள்ளது. எனவே இந்திதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

amitsha

இதுகுறித்து பாடகரும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கான மொழி அல்ல இந்தி; அது பல மாநிலங்களில் பல இந்தியர்களால் பேசப்படும் மொழி, நம்மை ஒன்றிணைத்துள்ளது. இந்த தலைமுறையினர், ஒருவருக்கொருவர் பழகிக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் இந்தி மொழியை வரவேற்க வேண்டும்

தேசிய கொடி, பறவை, பாடல், விலங்கு, பழம் என அனைத்தும் இருக்கும்போது அனைவரையும் ஒன்றிணைக்கும் பொதுவான மிழி ஏன் இருக்க கூடாது” என பதிவிட்டுள்ளார். 

Gayathri

இதுகுறித்து பாடகரும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கான மொழி அல்ல இந்தி; அது பல மாநிலங்களில் பல இந்தியர்களால் பேசப்படும் மொழி, நம்மை ஒன்றிணைத்துள்ளது. இந்த தலைமுறையினர், ஒருவருக்கொருவர் பழகிக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் இந்தி மொழியை வரவேற்க வேண்டும்.

தேசிய கொடி, பறவை, பாடல், விலங்கு, பழம் என அனைத்தும் இருக்கும்போது அனைவரையும் ஒன்றிணைக்கும் பொதுவான மிழி ஏன் இருக்க கூடாது” என பதிவிட்டுள்ளார்.