ஒரே ட்வீட்டில் தெறிக்க விட்ட எச்.ராஜா! அட்மின் எல்லாம் போடலைங்க!

ஒரே ட்வீட்டில் தெறிக்க விட்ட எச்.ராஜா! அட்மின் எல்லாம் போடலைங்க!

நடிகர் கமல்ஹாசனைப் போல தொண்டர்களுக்கு புரியாத வகையில் ட்வீட் போட்டு எல்லோரையும் குழப்புகிற ரகம் எல்லாம் எச்.ராஜாவிடம் கிடையாது. அது அவர் போடுகிற ட்வீட்டாக இருந்தாலும், அவருடைய அட்மின் போடுகிற ட்வீட்டாக இருந்தாலும் நச்சென்று நாலு வரியில் நறுக்குத் தெறித்த மாதிரி எல்லோரையும் கலவரப்படுத்தி விட்டு எதுவுமே தெரியாததைப் போல அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிவிடுவார்.

raja

இந்நிலையில் 
ஐ(ப்)`பசி’க்கு  
அடுத்தது.. 
‘கார்த்தி’(க்)கை (து) தானே! 
என்று மீண்டும் ட்விட்டரில் களமிறங்கி கலவரப்படுத்தியிருக்கிறார் எச்.ராஜா. 
 ஆஹா… எச்.ராஜா யாரைச் சொல்கிறார் என்கிற குழப்பம் எல்லாம் இல்லாமல் தொண்டர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்ததால், பலரும் இந்த ட்வீட்டை ஷேர் செய்து வருகிறார்கள். இன்னும் சிலரே.. எச்.ராஜா இப்படி இரட்டை கிளவியுடன் பேச ஆரம்பித்து விட்டாரே… உண்மையிலேயே இவர் போட்ட ட்வீட் தானா.. இல்லை மண்டபத்துல யாராவது அட்மின்கள் எழுதிக் கொடுத்ததா? ஆனா நல்லாயிருக்கு என்று பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

தற்போது நடந்து வரும் தமிழ் மாதமான ஐப்பசியையும், அடுத்து வர இருக்கும் கார்த்திகை மாதங்களை வைத்து அதற்குள் சிலேடையை புகுத்தி.. ப.சிதம்பரம் கைது நடவடிக்கையையும், அடுத்து அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கைது நடவடிக்கைஇருக்கும் என்று அடைமொழிகளையும் திணித்து ப.சிதம்பரம் ஜெயிலுக்கு சென்றாலும் எச்.ராஜா விடுவதாயில்லை என்று களம் இறங்கியிருக்கிறார்.
கடந்த எம்பி தேர்தலின் போதே ப.சிதம்பரம் குடும்பத்தைத் தொடர்ந்து எச்.ராஜா விமர்சித்து வந்தார். எல்லா மேடைகளிலுமே ஊழல் செய்த கார்த்தி சிதம்பரம் பதவிக்கு வரக்கூடாது என்று பகிரங்கமாகவே பேசி தான் வாக்கு சேகரித்தார். ஆனாலும், சொந்த தொகுதி என்பதால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக வெளியானது.