ஒரே ஒரு பெண்ணுக்காக அமைக்கப்படும் வாக்குச் சாவடி; வாக்களிக்க வருவாரா?!

 

ஒரே ஒரு பெண்ணுக்காக அமைக்கப்படும் வாக்குச் சாவடி; வாக்களிக்க வருவாரா?!

அருணாச்சலப் பிரதேசம் – சீன எல்லையில் உள்ள மலோகம் கிராமத்தில் வசிக்கும் பெண்மணி ஒருவருக்காக ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படவுள்ளது

அருணாச்சலப் பிரதேசம் – சீன எல்லையில் உள்ள மலோகம் கிராமத்தில் வசிக்கும் பெண்மணி ஒருவருக்காக ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படவுள்ளது.

அருணாச்சல் – சீன எல்லையில் அமைந்துள்ள கிராமம் மலோகம், இங்கு செல்ல மிகவும் கரடுமுரடான பாதைகளை கடக்க வேண்டும். இந்தப் பகுதியில் சொகேலா தயாங் என்ற பெண்மணி தன் குழந்தைகளோடு வசித்து வருகிறார்.

மலோகம் கிராமத்தில் சில குடும்பங்களே வசிக்கின்றனர். எனவே அவர்கள் வேறு வாக்குச் சாவடிகளில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். சொகேலா குடும்பம் மட்டும் பதியவில்லை, மலோகம் கிராமத்தில் 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சொகேலா மற்றும் அவரது கணவர் ஜனிலும் தயாங் ஆகிய இருவர் மட்டுமே வாக்களித்தனர்.

இந்த மக்களவைத் தேர்தலுக்கு ஜனிலும் தயாங்கும் தன் பெயரை வேறு வாக்குச் சாவடியில் பதிவு செய்துவிட்டார். அதனால் சொகேலா ஒருவருக்காக ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படவுள்ளது.

மலோகம் வாக்குச் சாவடியில் தேர்தல் அதிகாரியும், பாதுகாப்பு அதிகாரிகளும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்க வேண்டும். சொகேலா எப்போது வாக்களிக்க வருவார் என்பது தெரியாது. அவரை விரைந்து வாக்களிக்கும்படி வற்புறுத்தவும் கூடாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவித்துள்ளது.