ஒரே ஒரு நில பிரச்சினை….. மணிப்பூர் மாநிலம் முழுவதும் 3 நாட்களுக்கு இன்டர்நெட் முடக்கம்..

 

ஒரே ஒரு நில பிரச்சினை….. மணிப்பூர் மாநிலம் முழுவதும் 3 நாட்களுக்கு இன்டர்நெட் முடக்கம்..

மணிப்பூரில் நில பிரச்சினை தொடர்பாக 2 கிராமத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டதையடுத்து, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலம் முழுவதும் 3 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஹோமோனிமஸ் மாவட்டத்தில் உள்ள காம்ஜோங் கிராமத்தினருக்கும், சாசாத் கிராமத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரண்டு கிராமத்தினருக்கும் இடையிலான மோதல் நிலப்பிரச்சினையால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாறியது.ஒரு கட்டத்தில் ஹோமோனிமஸ் கிராமத்தினர் சாசாத் கிராமத்தில் வசிக்கும் நபர்களை தாக்கியதுடன், அவர்களது குடியிருப்புகளுக்கும் தீ வைத்துள்ளனர். 

மணிப்பூர் மேப்

இதனையடுத்து அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இரண்டு கிராமங்களிலும போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரம் தொடர்பான வீடியோக்கள், படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிற பகுதிகளில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க சமூக விரோத சக்திகள் முயற்சி மேற்கொண்டன. இதனையடுத்து அந்த மாநிலம் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு செல்போன் இன்டர்நெட் சேவைகளை முடக்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் காம்ஜோங் பகுதியில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செல்போன டவர்கள்
 
இது தொடர்பாக மணிப்பூர் மாநிலத்தின் சிறப்பு செயலர் (உள்துறை) எச்.யான் பிரகாஷ் வெளியிட்டுள்ள உத்தரவில், வெறுக்கத்தக்க மற்றும் கோபத்தை கிளரக்கூடிய வீடியோக்கள் மற்றும் படங்களை சமூக விரோத சக்திகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அமைதியான சூழ்நிலையை கெடுக்க முயற்சி செய்ததையடுத்து,  மாநிலத்தில் அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்க செல்போன் இன்டர்நெட் சேவைகள் அடுத்த 3 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.