‘ஒரே ஒரு இருமலால்  26 லட்சம் நஷ்டம்’- கொரானா பீதியில் மளிகை கடைக்காரருக்கு வந்த சோதனை ..

‘ஒரே ஒரு இருமலால்  26 லட்சம் நஷ்டம்’- கொரானா பீதியில் மளிகை கடைக்காரருக்கு வந்த சோதனை ..

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் அழிவை ஏற்படுத்தியதால், அது பரவாமலிருக்க தொழிற்சாலைகள், கடைகள், சாலைகள், விமானங்கள், நாட்டு எல்லைகள் முடக்கப்ட்டுள்ளன. இதன் நடுவே அத்தியாவசிய தேவைக்காக மளிகைக் கடைகளும், மருந்துக் கடைகளும் மருத்துவமனைகளும் மட்டுமே பெரும்பாலான நாடுகளில் திறந்தே உள்ளன.

super-market-895

யுனைடெட் ஸ்டேட்ஸில் கொரானா தாக்கம் அதிகமுள்ள பென்சில்வேனியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், ஒரு பெண் வேண்டுமென்றே அங்கு இருமியதால் 35,000 டாலர் அல்லது 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வெளியேற்ற வேண்டியிருந்தது.

ஜெர்ரிட்டியின் சூப்பர்மார்க்கெட் என்ற அந்த  சூப்பர்மார்க்கெட்டில், ஒரு பெண், பேக்கரி, இறைச்சிகள் மற்றும் மளிகைப் பொருட்களை பார்வையிட்டபோது திடீரென இருமினார். உடனே கடைக்கு பொருள் வாங்க வந்தவர்கள் அவர்  கொரானா நோயாளி என சந்தேகப்பட்டு கடையிலிருந்து வெளியேறினார்கள் .இதனால் கடை உரிமையாளர் அவர் எந்தெந்த பொருளை தொட்டாரோ அந்த பொருட்களையெல்லாம் தூக்கி குப்பையில் போட்டார் ,இதனால் அவருக்கு 26 ரூபாய் லட்சம் நஷ்டமானது. பிறகு இருமிய அந்த பெண்ணை விசாரித்தபோது தான் வேண்டுமென்றே ஒரு குறும்புக்காக அப்படி செய்ததாக கூறினார்.
உடனே மளிகை கடைக்காரர் அந்த பெண்ணை போலீசில் ஒப்படைத்தார். இப்போது  அந்த பெண்  கைது செய்யப்பட்டு நான்கு வெவ்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு   பதிவு செய்யப்பட்டுள்ளது.