ஒரே இரவில் 1 கோடிக்கு விற்பனையான கருவாடு… மகிழ்ச்சியில் வியாபாரிகள்!

 

ஒரே இரவில் 1 கோடிக்கு விற்பனையான கருவாடு…  மகிழ்ச்சியில் வியாபாரிகள்!

கடலூர், ராமேஸ்வரம், தூத்துக்குடியைச் சேர்ந்த வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, பானை என பல்வேறு பொருட்களின் விற்பனை களைக்கட்டும் என்பது அனைவர்க்கும் தெரிந்தது தான். ஆனால்  கடலூரில் கருவாடு விற்பனை கல்லா கட்டியுள்ளது. காரமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கருவாடு சந்தையில் கூட்டம் அலைமோதும். வழக்கமாக அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் சந்தை, பொங்கல் பண்டிகையையொட்டி இந்த முறை நள்ளிரவு 1 மணிக்கே தொடங்கியுள்ளது. இதனால் கடலூர், ராமேஸ்வரம், தூத்துக்குடியைச் சேர்ந்த வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

rttn

கடலூர் மட்டுமல்லாது மற்ற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிருந்தும் மக்கள், சிறுவியாபாரிகள் வருகை புரிந்துள்ளனர் . டீசல் விலை உயர்வால் மீன் வரத்து குறைந்தது. மேலும் ஜிஎஸ்டி காரணமாகக் கடந்த ஆண்டு கருவாடு விற்பனையில் தொய்வு ஏற்பட்டதையடுத்து, இந்த ஆண்டு ஜிஎஸ்டியில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளதால் கருவாடு விற்பனை வியாபாரம் சூடு பிடித்துள்ளது. அதிகாலை  6 மணிவரை நடந்த விற்பனையில் 1 கோடி ரூபாய் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வியாபாரிகள்  மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.