ஒரே ஆண்டில் 6000 நூற்றாண்டுகள் – டிக்டாக் செயலிக்கு அடிமையான இந்தியர்கள்!

 

ஒரே ஆண்டில் 6000 நூற்றாண்டுகள் – டிக்டாக் செயலிக்கு அடிமையான இந்தியர்கள்!

பிரபல டிக்டாக் செயலியில் இந்தியர்கள் ஒரே ஆண்டில் சுமார் 550 கோடி மணி நேரங்களை வீடியோ பார்க்க செலவிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

டெல்லி: பிரபல டிக்டாக் செயலியில் இந்தியர்கள் ஒரே ஆண்டில் சுமார் 550 கோடி மணி நேரங்களை வீடியோ பார்க்க செலவிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பல கோடி மக்கள் டிக்டாக் செயலியில் வீடியோ பார்க்க அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். பயனர்கள் வீடியோ பார்க்கும் நேரத்தின் அளவு ஆண்டுதோறும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்திய ஆய்வறிக்கை அமைந்துள்ளது. மொபைல் செயலிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு வரும் ‘ஆப் ஆனி’ எனும் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்தாண்டு மட்டும் இந்தியர்கள் சுமார் 550 கோடி மணி நேரங்களை டிக்டாக் வீடியோ பார்க்க செலவிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

ttn

இந்த மணிநேர கணக்கை ஆண்டுகளாக மாற்றினால் கிடைக்கும் விடை சுமார் 6.27 லட்சம் ஆண்டுகள் ஆகும். அதாவது ஏறத்தாழ ஆறாயிரம் நூற்றாண்டுகள் ஆகும். கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஆறு மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் இந்தியர்கள் 90 கோடி மணி நேரத்தை டிக்டாக்கில் செலவிட்டிருந்தனர். சர்வதேச அளவில் வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் டிக்டாக் நிறுவனமானது ஃபேஸ்புக் நிறுவனத்தை முந்தியிருக்கிறது. உலகிலேயே டிக்டாக் செயலியை அதிகம் பயன்படுத்துவது சீனர்கள். அவர்களுக்கு அடுத்த இடத்தில் இந்தியர்கள் உள்ளனர்.