ஒரே ஆண்டில் 38 ஆயிரம் பேர் துப்பாக்கிச்சூட்டில் பலி ! வாஷிங்டனில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட தொண்டு நிறுவனம் !

 

ஒரே ஆண்டில் 38 ஆயிரம் பேர் துப்பாக்கிச்சூட்டில் பலி ! வாஷிங்டனில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட தொண்டு நிறுவனம் !

அமெரிக்காவில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில் 2019ம் ஆண்டு மட்டும் 38 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர 23 ஆயிரத்து 760 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவமும் நடைபெற்றுள்ளது.

உலகிலேயே அதிக முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறப்படும் அமெரிக்காவில்தான் 2019ம் ஆண்டு மட்டும் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை சம்பவங்களில் 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

usa-gunfire

அமெரிக்காவில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில் 2019ம் ஆண்டு மட்டும் 38 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர 23 ஆயிரத்து 760 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவமும் நடைபெற்றுள்ளது. நம்மூரில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு அநேகம் பேருக்கு உரிமம் இல்லை. அங்கே உரிமம் இருப்பதால் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ஒரு நொடியில் உயிரை நீத்துக் கொள்கின்றனர். இதேபோன்று விபத்தாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 14 ஆயிரத்து 970 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு இதேபோன்று 14 ஆயிரத்து 789 பேர் உயிரிழந்தனர். எனினும் 2018ம் தற்கொலை செய்துகொண்டவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.

usa-gun-fire-01

கடந்தாண்டு அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 11 வயதிற்குட்பட்ட 762 குழந்தைகள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். 473 பேர் படுகாயமடைந்துள்ளனர். 17 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களில் 762 பேர் துப்பாக்கி குண்டுக்கு பலி ஆகி உள்ளனர். 2,253 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் 327.2 மில்லியன் மக்களில் 200 மில்லியன் மக்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வைத்துள்ளது என்பது நமக்கு கிடைத்திருக்கும் மற்றொரு தகவல்.

gunfire-dead-usa