ஒரேயொரு கமெண்ட்… ஓஹோன்னு வாழ்க்கை..! புரியலையா ? இருங்க க்ளாரிட்டியா சொல்றேன்..

 

ஒரேயொரு கமெண்ட்… ஓஹோன்னு வாழ்க்கை..! புரியலையா ? இருங்க க்ளாரிட்டியா சொல்றேன்..

போன வாரம், அமேசன்ல என் போனுக்கு ஒரு டெம்பர் கிளாஸ் வாங்கினேன்.அந்த விளம்பரத்துல போன் மேல சுத்தியல வெச்சி தட்டுறது, கொரங்கு ஒன்னு போன் மேல குதிக்கறது, டிரில்லர வெச்சி ட்ரில் பண்றது மாதிரியான படங்களை பார்த்து, பரவச நிலைக்கு போய், நல்லாதான் இருக்கும்போல அப்டீன்னு “ஜஸ்ட்” 700 ஒவாய்க்கு வாங்கினேன்.

அமேசானில் பொருள் வாங்கிய சேலத்தை சேர்ந்த பாலா என்பவர், பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளார். ஆனால் அவர் அனுப்பிய விமர்சன குறுஞ்செய்தி அமேசான் நிறுவனர்களின் காதுகளை குடைய அவருடைய பணத்தை திருப்பியளித்துள்ளனர். இதுபோன்ற ஒரு நிகழ்வு உங்களுக்கும் நடந்தால் நீங்களும் இந்த யோசனையை தாராலமாக செய்யலாம். முகநூல் பயனர் எழுதிய அந்த பதிவில், 

”போன வாரம், அமேசன்ல என் போனுக்கு ஒரு டெம்பர் கிளாஸ் வாங்கினேன்.அந்த விளம்பரத்துல போன் மேல சுத்தியல வெச்சி தட்டுறது, கொரங்கு ஒன்னு போன் மேல குதிக்கறது, டிரில்லர வெச்சி ட்ரில் பண்றது மாதிரியான படங்களை பார்த்து, பரவச நிலைக்கு போய், நல்லாதான் இருக்கும்போல அப்டீன்னு “ஜஸ்ட்” 700 ஒவாய்க்கு வாங்கினேன்.

நாமளே வீட்டிலிருந்தபடி ஓட்டலாம்னு அதுல ஒரு கமெண்ட் கூட இருந்துச்சி. ஆனாலும் 700 ஆச்சே.. தப்பாயிர கூடாதுன்னு கடைல கொடுத்து ஒட்டலாம்ன்னு போனேன். அங்க போய் ஓட்டினா.. ஒரு பக்கம் ஓட்டும்போது இன்னொரு பக்கம் வெளிய வருது.. 
அதை அமுக்கினா இது வெளிய வருது..! அரைமணி நேர முயற்சியின் முடிவில். டெம்பர் கிளாஸ் தன டெம்பரை இழந்து ஒரு பக்கமாக உடைந்து போனது.. செல்போன் கடைக்காரர் “நான் இல்ல” என்று பதறினார்.

உடைந்து போன பொருளை ரிட்டர்ன் போட முடியாது இல்லையா..! அதன் பொருட்டு கொலே காண்டாகி, என்னை மாதிரி இன்னொருத்தன் ஏமாறாம இருக்க கமெண்டாவது போட்டு வைப்போம்ன்னு லிங்குக்கு போனா! Feedback ஆப்ஷன டிசேபிள் பண்ணி வெச்சிருக்கானுக.. ஆர்டர் பேஜ் போனா.. “ப்ராடக்ட் சோல்ட் அவ்ட்! செம்ம டிமாண்ட் அதனால இப்பவே ப்ரீ ஆர்டர் பண்ணுங்கோ” அப்டீன்னு போட்டிருந்தான்.

நேத்துதான் ஆர்டர் பேஜ் ஆக்டிவ் ஆச்சி..! அதுல உள்ள கமென்ட் செக்ஷன்ல போய் என்னோட அரச்சீற்றத்தை காட்டிட்டு..”700 ரூபாய கிழிச்சி ரோட்ல போடலாம்.. இல்லைன்னா ரோட்சைட் பெக்கருக்கு கொடுக்கலாம்” அப்டீன்னு கமெண்டு போட்டிருந்தேன்.

இன்னைக்கு மதியம் பயபுள்ளைங்க அடிச்சி புடிச்சிகிட்டு போன போட்டானுக.. “சாரி சார்.. தப்பாயிட்டு.. உங்க பணத்தை திருப்பி தரோம்” அப்டீன்னு..! நம்பாமதான் UPI ID கொடுத்தேன். கொடுத்த அடுத்த செகண்ட் காசு கைக்கு வந்துருச்சி..!

நீதி : எவனா இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேளுங்க.. இல்லைன்னா நீதியும் கிடைக்காது கைல இருந்து போன நிதியும் கிடைக்காது… ஆங்..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.