‘ஒரு ஹெல்மெட் வாங்குனா ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’.. அதிரடி காட்டும் சேலம் கடைக்காரர் !

 

‘ஒரு ஹெல்மெட் வாங்குனா ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’.. அதிரடி காட்டும் சேலம் கடைக்காரர் !

அந்த கடையில் ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் படுத்தியதில் இருந்து, கட்டாய ஹெல்மெட் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘நோ ஹெல்மெட்.. நோ என்ட்ரி’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க. வெங்காய விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த இரண்டின் தேவையையும் அறிந்த, சேலத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரி ஒருவர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ttn

சேலம் மாவட்டம் கோட்டைப் பகுதியில் ஜம் ஜம் என்ற பெயரில் ஹெல்மெட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று அறிவித்துள்ளார். தற்போது சேலம் மாவட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது.

ttn

அந்த கடையில் வரிசையாக ஹெல்மெட்டுகளையும், அதனுடன் ஒரு கிலோ வெங்காயத்தையும் அடுக்கி வைத்துள்ளார். இது மக்களை ஈர்த்துள்ளது. அதுமட்டுமில்லாமல், ஹெல்மெட்டின் ஆரம்ப விலை ரூ.350 என்பதால் இந்த வியாபார யுக்தி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே, வாரணாசி பகுதியில் ஒரு செல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டு மக்களால் ஈர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.