ஒரு வாரத்தில் 20.39 கோடி பெண்கள் கணக்கில் தலா ரூ.500! – மத்திய அரசு மும்முரம்

 

ஒரு வாரத்தில் 20.39 கோடி பெண்கள் கணக்கில் தலா ரூ.500! – மத்திய அரசு மும்முரம்

ஒரு வாரத்தில்  20 கோடியே 39 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.500 டெபாசிட் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில்  20 கோடியே 39 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.500 டெபாசிட் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுதொழில் செய்பவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பலரும் பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் மக்களுக்கு உதவும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.

jan-dhan-yojana

அதில் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கிய பெண்களின் கணக்குகளில் மாதம்தோறும் ரூ.500 என்ற ரீதியில் 3 மாதங்களுக்கு பணம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் ஏப்ரல் முதல் வார இறுதிக்குள் 20 கோடியே 39 லட்சம் ஜன்தன் யோஜனா கணக்குகளில் ரூ.500 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதற்கட்டமாக நேற்று ஒருநாளில் மட்டும் 4 கோடியே 7 லட்சம் வங்கிக் கணக்குகளில் நிவாரண தொகை செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு தொடங்கி இரண்டு வாரங்கள் ஆக உள்ள நிலையில் 500 ரூபாய் டெபாசிட் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் விரைவாக நிவாரண உதவிகளை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.