ஒரு வாரத்திற்கு 5 கிராம் பிளாஸ்டிக்கை நாம் உண்கிறோம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்…

ஒரு வாரத்திற்கு 5 கிராம் பிளாஸ்டிக்கை நாம் உண்கிறோம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்…

வாரத்துக்கு  5 கிராம் வரையிலான பிளாஸ்டிக்கை  நாம் ஒவ்வொருவரும் உட்கொள்வது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாரத்துக்கு  5 கிராம் வரையிலான பிளாஸ்டிக்கை  நாம் ஒவ்வொருவரும் உட்கொள்வது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

plastic

அனைத்துலகச் சுற்றுப்புற அற அமைப்பான WWF மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Newcastle பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. அதில் குடிநீர் மூலமாக அதிகமான பிளாஸ்டிக் மனிதர்களின் உடலில் செல்வது கண்டறியப்பட்டது. மேலும் ஷெல் மீன் எனப்படும் கிளிஞ்சல் வகைக் கடல் உயிரினங்கள் மூலமாகவும் பிளாஸ்டிக் மனித வயிற்றுக்குள் செல்கிறது. மீன்களின் செரிமான மண்டலத்தில் இருக்கும் பிளாஸ்டிக் மனிதர்களின் வயிற்றுக்குள்ளும் செல்கிறது.

water

குடிநீரில் இருந்துமட்டும் வாரத்திற்கு சராசரியாக ஒருவர் 1,769 பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் சோதிக்கப்பட்ட குடிநீரில், சுமார் 95 சதவீதம் பிளாஸ்டிக் நுண்ணிழைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற நாடுகளில் 72 சதவீத பிளாஸ்டிக் நுண்ணிழைகள் உள்ளன.