ஒரு வழியாக டைகளை தகர்த்தெறிந்து களவாணி 2 திரைப்படம் வெளியானது!

 

ஒரு வழியாக டைகளை தகர்த்தெறிந்து களவாணி 2 திரைப்படம் வெளியானது!

களவாணி 2  தடைகளைத் தகர்த்தெறிந்து இன்று வெளியாகியுள்ளது. 

சென்னை: களவாணி 2  தடைகளைத் தகர்த்தெறிந்து இன்று வெளியாகியுள்ளது. 

கடந்த 2010-ம் ஆண்டு வெளி வந்த  படம் களவாணி.  விமல்- ஓவியா நடிப்பில் வெளியான அப்படம் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. முழுக்க முழுக்க உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்டு உள்ள இப்படத்தில் ராவன்னா என்ற கதாபாத்திரத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வில்லனாக அறிமுகமியுள்ளார். படத்தை பார்த்த வினியோகஸ்தர்கள், படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறியிருந்த நிலையில், ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். 

பின்பு பண பிரச்சனை காரணமாகப் படத்தின் ரிலீஸ் சொன்ன தேதியில் வெளியாகாமல் தட்டி சென்றே இருந்தது. இந்த நிலையில் தற்போது அனைத்து தடைகளைத் தகர்த்தெறிந்து ஒரு வழியாக களவாணி 2 திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. 

kalavani

மேலும் களவாணி படத்தின் முதல் பாகம் இன்று வரை மக்களின் மனதில் இடம் பிடித்து இருப்பது போல் களவாணி 2 திரைப்படமும் இடம்பிடிக்கும் என்று படக்குழு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.