ஒரு வருஷத்தில் 5வது முறையாக நிரம்பி வழியும் அணை! வெள்ள அபாய எச்சரிக்கை!

 

ஒரு வருஷத்தில் 5வது முறையாக நிரம்பி வழியும் அணை! வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் பல மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,  பில்லூர் அணை அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலை காடுகளில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக,  பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அனை நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் பல மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,  பில்லூர் அணை அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலை காடுகளில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக,  பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அனை நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. பில்லூர் அணையின் மொத்த உயரமான 100 அடியில், தற்போது 98 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீரில் விநாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் முழுவதையும் தற்போது அணையில் தேக்கி வைக்காமல் அப்படியே நான்கு மதகுகள் வழியாக வெளியேற்றி வருகிறார்கள். அணையில் இருந்து 4 மதகுகள் வழியே தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதன் காரணமாக பவானி ஆற்றில் தற்போது ஆக்ரோஷமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

dam

மேலும் மழை நிற்காமல் தற்போது வரையில் நீலகிரியிலும், பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வருவதால், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் போது, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும். அதனால், வருவாய்த்துறை சார்பில், அணையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்துவிடப்படும் நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படலாம் என்பதால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணிதுவைக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் விதமாக காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.