ஒரு வருடம் செல்ஃபோன் உபயோகிக்காமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு: போட்டிக்கு நீங்க ரெடியா?

 

ஒரு வருடம் செல்ஃபோன் உபயோகிக்காமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு: போட்டிக்கு நீங்க ரெடியா?

ஒரு வருடம் செல்ஃபோன் உபயோகிக்காமல் இருந்தால் 72 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற வித்யாசமான அறிவிப்பை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

சென்னை: ஒரு வருடம் செல்ஃபோன் உபயோகிக்காமல் இருந்தால் 72 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற வித்யாசமான அறிவிப்பை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இன்றைய நவீன உலகில் செல்போன் இல்லாமல் ஒரு மனிதனால் 5 நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், தன் நிறுவனத்தை பிரபலப்படுத்தும் நோக்கிலும், ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக விட்டமின்வாட்டர் என்ற தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. 

vittamin water

கோக கோலா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனத்தில் சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில், “ஸ்மார்ட்போனிடமிருந்து  ஏன் உங்களுக்கு இடைவெளி வேண்டும்? என்பதை விளக்கும் வகையிலும், ஸ்மார்ட்போன் இல்லாத சமயங்களில் என்ன செய்வீர்கள் என்பது குறித்தும் தெளிவாகி எழுதி ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் #nophoneforayear மற்றும் #contest ஆகிய ஹேஸ்டேக்குகளில் பதிவிட வேண்டும். அதற்கான கடைசி தேதியாக ஜனவரி 8, 2019 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் தேர்வாகும் நபர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட மொபைல் போன் வழங்கப்படும். போட்டியாளர்கள் ஒரு வருடத்திற்கு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் மொபைல் போனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் லேப்டாப், டெஸ்க்டாப், அமேசான் அலெக்சா, கூகுள் குரோம் போன்றவற்றை உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் ஆகியவற்றை உபயோகிக்ககூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதிக்குள் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மொபைல் போன் வழங்கப்படும் என்றும் ஒரு வருடம் முற்றிலுமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தவில்லை எனும் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின் வெற்றியாளருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் விட்டமின்வாட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.