ஒரு வருடம் ஓசியில் கேஎஃப்சி சிக்கன் சாப்பிட்ட இளைஞர்: நூதன திருட்டில் ஈடுபட்டது அம்பலம்!?

 

ஒரு வருடம் ஓசியில் கேஎஃப்சி சிக்கன் சாப்பிட்ட இளைஞர்: நூதன திருட்டில் ஈடுபட்டது அம்பலம்!?

கேஎஃப்சி உணவகங்களின்  ஒரு வருடமாகப் பணம் கொடுக்காமல் பொய்  கூறி சாப்பிட்டு வந்த இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கேஎஃப்சி உணவகங்களின்  ஒரு வருடமாகப் பணம் கொடுக்காமல் பொய்  கூறி சாப்பிட்டு வந்த இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

kfc

கேஎஃப்சி  சிக்கன் என்றால் அது உலகம் முழுவதும் பிரபலமாகி  உள்ளது. அதனால் அதன் கிளைகள் நாளுக்கு நாள் உலகம் முழுவதும்  பரவிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் க்வாஜுலு நடால் என்கிற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஒவ்வொரு கிளைக்காகச்  சென்று தான் உணவைத் தரம் பார்க்கும் அதிகாரி என்று கூறிக் கொண்டு தினமும் கேஎஃப்சியில் உள்ள வெவ்வேறு உணவுகளைச் சுவைத்து வந்துள்ளார்.  

kfc

பொதுவாக அந்த இளைஞர் உணவகத்துக்குள் நுழைந்தவுடன் உணவு தயாரிக்கும் இடத்துக்கே நேரடியாகச் செல்வதுடன்,  உணவுகளைப் பற்றிக் குறிப்பெடுத்துக் கொள்வாராம்.  அதனால் அவரை அதிகாரி என்று அங்கு பணிபுரிந்தவர்களும் நம்பியுள்ளனர். கேஎஃப்சி உணவைப் பற்றி அவர் சரியாகக் கூறியுள்ளார்.  அதனால் அவர் கேஎஃப்சியில் பணிபுரிந்த முன்னாள் ஊழியராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரைச் சுற்றியுள்ள கேஎஃப்சி உணவகங்களில் இந்த வேலையை 1 வருடமாகச் செய்துள்ள இந்த இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி ஒரு வதந்தி என்றும் இதனால் இன்னும் விளம்பரம் கிடைத்துள்ளதாகவும்   தென்னாப்பிரிக்க கேஎஃப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.