ஒரு வருடத்தில் இந்தியாவில் கடத்தப்படும் குழந்தைகள் விவரம் – பகீர் ரிப்போர்ட்

ஒரு வருடத்தில் இந்தியாவில் கடத்தப்படும் குழந்தைகள் விவரம் – பகீர் ரிப்போர்ட்

கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும் கடத்தப்படும் இத்தகைய குழந்தைகள், ரயில்வே பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

உலக காணாமல் போன குழந்தைகள் தினத்தையடுத்து, தென்மேற்கு ரயில்வே சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்ட தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. கடந்த ஒரு வருடத்தில் காணாமல் போன குழந்தைகளில், தென்மேற்கு ரயில்வே நிலையங்கள் மற்றும் ரயில்களில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை மட்டும் 523 என ரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

International Missing Children Day

கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும் கடத்தப்படும் இத்தகைய குழந்தைகள், ரயில்வே பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் 1125 சிறுவர்கள் மற்றும் 174 சிறுமிகள் என 1299 குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், இதில் பெங்களூரு சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மட்டும் 523 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தைச் சேர்ந்த குழந்தைகள் என்று மட்டும் இல்லை, பீஹார் மற்றும் ஆந்திரத்தைச் சேர்ந்த குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் அதிகளவில் இப்பக்கமாக கடத்தப்படுவதை அறிந்துள்ள ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள், இதற்கெனவே தனியாக ஒரு குழுவை உருவாக்கியுள்ளனர். உங்கள் குழந்தைகள் பத்திரம்.