‘ஒரு வக்கீல் செய்யுற வேலையா இது’ -பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு பிறகு வெளிவந்த விவகாரம்..

‘ஒரு வக்கீல் செய்யுற வேலையா இது’ -பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு பிறகு வெளிவந்த விவகாரம்..

அந்த பெண் எஸ்பி அலுவலகத்திற்கு ஒரு பெட்ரோல் பாட்டிலுடன் வந்து,தன் உடல்  மீது தெளித்தபோது,போலீசார் அவரை தடுத்து  தீ வைத்துக் கொள்ளாமல் தடுத்தனர்.பின்னர், எஸ்.பி.  தலையிட்டு,வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

ஷாஜகான்பூரில்  ஒரு  வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்களால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக  42 வயது பெண் ஒருவர் திங்கள்கிழமை மாலை  காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் தற்கொலை செய்து  கொள்ள முயன்றார்.ஆறு மாதங்களாக புகாரளித்தும்  உள்ளூர் போலிசார் அவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்று அந்த பெண் குற்றம் சாட்டினார் 

அந்த பெண் எஸ்பி அலுவலகத்திற்கு ஒரு பெட்ரோல் பாட்டிலுடன் வந்து,தன் உடல்  மீது தெளித்தபோது,போலீசார் அவரை தடுத்து  தீ வைத்துக் கொள்ளாமல் தடுத்தனர்.பின்னர், எஸ்.பி.  தலையிட்டு,வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

sp office

இதற்கிடையில்,தில்ஹார் காவல் நிலைய ஆய்வாளர்  “அந்த பெண் ஏற்கனவே வக்கீலுடன் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.ஆனால் அதற்கு பிறகு அந்த வக்கீல்  அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.அதனால் அந்தப் பெண் இப்போது வழக்கறிஞர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிராக கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். நாங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம், இது குறித்து விசாரித்து வருகிறோம். “என்றார் .